Thursday, November 03, 2005

Back to Bangalore :(

தீபாவளி முடிந்து பெங்களூருக்கு வந்தாயிற்று:( வேலைக்குப் போகவே மனசில்லை. பாதி பேர் தான் இரண்டு நாளாக வேலைக்கு வந்தார்கள். இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச் வேற. போன மேட்ச் தோனி விளாசித் தள்ளிட்டான்! என்ன அடி! இன்றைக்கும் winning shot ஐ ஸிக்ஸர் அடித்து தான் எடுத்தான். சரி, மேலே தீபாவளி கதை.
போன வெள்ளியே மட்டம் போட்டுட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பியாச்சு. நான் நல்ல பையங்க. என் காதலி வீட்டிற்கும் கல்லூரி நண்பர்களை காணவும் தான் போனேன். சத்தியமாய் தண்ணி அடிக்க இல்லை! செல்லும் வழியில் மாத்தூர் அருகே ஏரி உடைப்பு. 2 மணிக்கு எழுந்து பார்த்தால் ஓட்டுநருக்கே வழி தெரியவில்லை. 'கிருஷ்ணகிரி தாண்டி எங்கேயோ இருக்கோம் ஸார்' என்றார். 3 மணி வரையில் அவருக்கு கம்பெனி கொடுத்தோம். பட்டி தொட்டியெல்லாம் சுற்றி விட்டு நல்ல படியாக state highwayக்கு கொண்டு வந்து விட்டார்கள். சில விநோதமான ஊர் பெயரெல்லாம் கண்ணில் பட்டன. பரசுராமன் கௌண்டர் something என்றெல்லாம் இருந்தது. நல்லா இருந்தது அந்த experience. எவ்வளவு சின்ன சாலையில் இருபுறமும் வண்டிகள். இதில் பாதி வழியில் நிறுத்தி எதிரே வரும் ஓட்டுநரிடம் குசலம் விசாரித்தல் வேறு! நம்ம ஊர் ஓட்டுநர்களால் தான் இது முடியும். இரவில் வண்டி ஓட்டுவது எவ்வளவு கஷ்டம் என்று அப்போது தான் புரிந்தது. நல்லா தூங்குவதனால் எவ்வளவு miss செய்கிறோம் என்று புரிந்தது.
Plan செய்த எல்லாம் செய்தேன். கல்லூரி தோழர்கள், தோழிகள் 5 பேர் சந்தித்தோம். மித்தவர்கள் எல்லாம் எங்கே? College Auditorium நன்றாக கட்டி உள்ளார்கள். Project Guideஐ சந்தித்தேன். நான் மிகவும் மரியாதை வைத்திருப்பவர்களில் ஒருவர். தோழி மாதிரி பேசிக்கொண்டிருந்தார். Professors' nick name எல்லாம் leak செய்துவிட்டு வந்தேன். த்ருப்தியாய் இருந்தது!
சனிக்கிழமை சாயங்காலம் beachல் நண்பர்கள் சந்தித்தோம். 5 வருடங்களில் ரொம்ப வயசான ஒரு feeling:( எல்லாம் அவரவர் வேலை, திருமணம் ஆகியிருந்தால் மனைவி, குழந்தை அல்லது அதற்கான முயற்சி ;), இல்லாவிடில் பையன்/ பெண் பார்த்தல் இப்படியே முடிந்துவிடுகிறது. சே என்ன வாழ்க்கை இது! சின்னஞ் சிறு இன்பங்களில் interest போய் விடுகிறது. என் தோழி அளித்த toy gunஐ beachல் வெடித்தால் எல்லாம் விநோதமாய் பார்த்தார்கள். குழந்தைத்தனத்தை தொலைக்காதவனே கவிஞன் என்று சிறு வயதில் படித்த ஞாபகம்.. பொறுப்பு, வேலை, இப்படிப்பட்ட விஷயங்களில் வாழ்க்கைக்கான பொருளை தொலைத்து விடுகிறோம். Hmmmmm...
பாண்டிச்சேரி ட்ரிப் ஒரு சுகமான அநுபவம். திருமணம் என்பது இரு நபர்களில் ஸங்கமம் இல்லை, இரு குடும்பங்களின் என்று நன்று புரிந்த ட்ரிப். ஞாயிற்றுக்கிழமை தங்கை வீட்டிற்கு. 'என்னடா அங்கே மூன்று நாட்கள், இங்கே இரண்டு நாட்கள் தானா' என்று பொய் கோபம்!
மேலும் தோனி தீபாவளி கதை, பெட் என்ன ஆச்சு, 'சீ சீ சீ' மஜா பாட்டு எல்லாம் அடுத்த blogல்.

3 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

visit and give your feedback

http://www.peacetrain1.blogspot.com/

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

குறையொன்றுமில்லை. said...

உங்க பதிவு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.