Thursday, November 03, 2005

Back to Bangalore :(

தீபாவளி முடிந்து பெங்களூருக்கு வந்தாயிற்று:( வேலைக்குப் போகவே மனசில்லை. பாதி பேர் தான் இரண்டு நாளாக வேலைக்கு வந்தார்கள். இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச் வேற. போன மேட்ச் தோனி விளாசித் தள்ளிட்டான்! என்ன அடி! இன்றைக்கும் winning shot ஐ ஸிக்ஸர் அடித்து தான் எடுத்தான். சரி, மேலே தீபாவளி கதை.
போன வெள்ளியே மட்டம் போட்டுட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பியாச்சு. நான் நல்ல பையங்க. என் காதலி வீட்டிற்கும் கல்லூரி நண்பர்களை காணவும் தான் போனேன். சத்தியமாய் தண்ணி அடிக்க இல்லை! செல்லும் வழியில் மாத்தூர் அருகே ஏரி உடைப்பு. 2 மணிக்கு எழுந்து பார்த்தால் ஓட்டுநருக்கே வழி தெரியவில்லை. 'கிருஷ்ணகிரி தாண்டி எங்கேயோ இருக்கோம் ஸார்' என்றார். 3 மணி வரையில் அவருக்கு கம்பெனி கொடுத்தோம். பட்டி தொட்டியெல்லாம் சுற்றி விட்டு நல்ல படியாக state highwayக்கு கொண்டு வந்து விட்டார்கள். சில விநோதமான ஊர் பெயரெல்லாம் கண்ணில் பட்டன. பரசுராமன் கௌண்டர் something என்றெல்லாம் இருந்தது. நல்லா இருந்தது அந்த experience. எவ்வளவு சின்ன சாலையில் இருபுறமும் வண்டிகள். இதில் பாதி வழியில் நிறுத்தி எதிரே வரும் ஓட்டுநரிடம் குசலம் விசாரித்தல் வேறு! நம்ம ஊர் ஓட்டுநர்களால் தான் இது முடியும். இரவில் வண்டி ஓட்டுவது எவ்வளவு கஷ்டம் என்று அப்போது தான் புரிந்தது. நல்லா தூங்குவதனால் எவ்வளவு miss செய்கிறோம் என்று புரிந்தது.
Plan செய்த எல்லாம் செய்தேன். கல்லூரி தோழர்கள், தோழிகள் 5 பேர் சந்தித்தோம். மித்தவர்கள் எல்லாம் எங்கே? College Auditorium நன்றாக கட்டி உள்ளார்கள். Project Guideஐ சந்தித்தேன். நான் மிகவும் மரியாதை வைத்திருப்பவர்களில் ஒருவர். தோழி மாதிரி பேசிக்கொண்டிருந்தார். Professors' nick name எல்லாம் leak செய்துவிட்டு வந்தேன். த்ருப்தியாய் இருந்தது!
சனிக்கிழமை சாயங்காலம் beachல் நண்பர்கள் சந்தித்தோம். 5 வருடங்களில் ரொம்ப வயசான ஒரு feeling:( எல்லாம் அவரவர் வேலை, திருமணம் ஆகியிருந்தால் மனைவி, குழந்தை அல்லது அதற்கான முயற்சி ;), இல்லாவிடில் பையன்/ பெண் பார்த்தல் இப்படியே முடிந்துவிடுகிறது. சே என்ன வாழ்க்கை இது! சின்னஞ் சிறு இன்பங்களில் interest போய் விடுகிறது. என் தோழி அளித்த toy gunஐ beachல் வெடித்தால் எல்லாம் விநோதமாய் பார்த்தார்கள். குழந்தைத்தனத்தை தொலைக்காதவனே கவிஞன் என்று சிறு வயதில் படித்த ஞாபகம்.. பொறுப்பு, வேலை, இப்படிப்பட்ட விஷயங்களில் வாழ்க்கைக்கான பொருளை தொலைத்து விடுகிறோம். Hmmmmm...
பாண்டிச்சேரி ட்ரிப் ஒரு சுகமான அநுபவம். திருமணம் என்பது இரு நபர்களில் ஸங்கமம் இல்லை, இரு குடும்பங்களின் என்று நன்று புரிந்த ட்ரிப். ஞாயிற்றுக்கிழமை தங்கை வீட்டிற்கு. 'என்னடா அங்கே மூன்று நாட்கள், இங்கே இரண்டு நாட்கள் தானா' என்று பொய் கோபம்!
மேலும் தோனி தீபாவளி கதை, பெட் என்ன ஆச்சு, 'சீ சீ சீ' மஜா பாட்டு எல்லாம் அடுத்த blogல்.

Thursday, October 27, 2005

Chumma

தீபாவளி நெருங்குகிறது! தேசிகன் நல்ல பதிவு செய்திருந்தார். பெங்களூரில் நல்ல மழை! 1958க்குப் பிறகு இந்த வருடம் என்று எந்கோ படித்த ஞாபகம். ஆனாலும் ஆச்சர்ய பட வைப்பது மீண்டும் சகஜ நிலைமைக்கு வர நாம் எடுக்கும் நேரம் தான். திருச்சியிலும் செம மழை போல. தினமலர் புண்ணியத்தால் காணப்பெற்றோம். Bangalore.pps, Trichy_After_Rains.zip போன்றவை forward செய்யப் பெற்று email ன் மகத்துவத்தை புரிய வைத்தன. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா வேண்டாமா என்று ஒரு தயக்கம். குழந்தைத் தொழிலை ஒத்துக்கொள்வதா? எவ்வளவு சுற்றுச்சூழல் மாசு? ஆனால் Standard Fireworks போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் சிறார்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்று கேள்வி! புதுசு உடுத்தும் ஆசையும் குறைந்து விட்டது:(. நாம் பட்டாசு வாங்கினாலும் சிறார் தொழிலாளர்களுக்கு வருமானம் ஆகிற்று. ஒன்றும் புரியவில்லை. கடைசியில் ஒரு 6 மணிக்கு எழுந்து, தலைக்கு குளித்து (கங்கா ஸ்னாநம்), பக்ஷணம் கொறித்து, idiot boxக்கு முன்னாடி தொலைத்து விடுவெனோ என்று பயமாக இருக்கிறது. என் தோழியுடன் யார் முதலில் எழுப்புகிறார்கள் என்று bet.
நிறைய plans! என் காதலி, நீ இதை படித்து கொண்டிருக்கையில் நான் உன் வீட்டில் இருப்பேன். உன் தாய், தந்தை, தம்பியுடன் இரண்டு நாட்கள். பின் என் தங்கையின் புகுந்த வீட்டில் இந்த வருட தீபாவளி. இடையில் கல்லூரி நண்பர்களை சந்திக்க முயல்வேன்.
மீண்டும் 4 மணி-சீயக்காய்-கண் எரிச்சல் குளியல், யார் முதல் என்று போட்டி போட்டு வெடிக்கும் வெடி, மல்லிகை பூவாய் இட்லி, இனிப்பு காரம், புத்தாடை, தீபாவளி இனாம், சாலமன் பாப்பையா பட்டிமன்றம், புதிய பாடல், எல்லாம் வேண்டும். மழை கொஞ்சம் ஓய்ந்திருக்க வேணும்! எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். Have a Safe and Happy Diwali! White house is going to host Diwali function for the third year in row... Link

Thursday, September 29, 2005

Bismillah Khan

I finally got to post this blog - late by a week.

சென்ற ஞாயிற்றுக் கிழமை (25th Sept), பிஸ்மில்லாஹ் கானின் ஷெனாய் கச்சேரி! இனிமையான மாலைப் பொழுது. பிஸ்மில்லாஹ் கான் இசை கலைஞர்களுக்கே உரித்தான idiosyncrasies! பாவம் அந்த Mic பையன். Voice quality சரியாக இல்லை. சும்மா சும்மா அவனை சீண்டிக்கொண்டே இருந்தார். முதன் முதலாக நான் ஷெனாய் concert போனேன். சில இடங்களில் உயிரை உருக்கியது. Tabla வாசித்தது அவருடைய nephew. பல இடங்களில் தன்னை விட அதிக முக்கியதுவம் தந்தார். என்ன அருமையான வாசிப்பு! அடா அடா! கர்நாடக ஸங்கீத கச்சேரியில் தனி ஆவர்த்தனம் போல. விஷயம் தெரிந்தவர்கள் திருத்தவும் - அது தனி ஆவர்த்தனமா இல்லை வேறு technical termஆ என்று. ஆ என்று ஓ சொல்ல மறந்து விட்டேனே! Concert நடத்திய Rhythm School of Arts க்கு ஒரு ஓ! (I forgot the URL. Will link it soon. May be I forgot the name also.)
ஹ்ம்ம்ம். எல்லாம் முடிந்த பிறகு ஒரு இனம் புரியாத வருத்தம் - மருங்காபுரி கோபால கிருஷ்ணையர் வழி வந்த ஒரு ஞானசூனியம் நான்! Our generation is a broken link in the lineage of musical geniuses...

Friday, September 23, 2005

Muthal anubhavam!

எனது முதல் தமிழ் பதிப்பு!
நான் நேரடியாக தமிழில் எழுதாமல் வரி வடிவம் பெயர்ப்பானை உபயோகிக்கின்றேன்! விரைவில் தமிழிலேயே எழுதுவேன்!